×

கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக கொரோனா குணமடைவதாக விளம்பரம் செய்த இனிப்புக் கடையின் உரிமம் ரத்து

கோவை :கோவையில் மூலிகை மைசூர்பாக் மூலமாக கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக விளம்பரம்  செய்த இனிப்புக் கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். கோவை மாவட்டம் தொட்டிப் பாளையத்தில் இயங்கி வரும் லாலா இனிப்புக் கடை ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமானது. இந்த கடையில் தயாரிக்கப்படும் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகி வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சின்னியம்பாளையம், ஆர்ச்சிப்புதூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பா அளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் குணமாகி வந்ததாக ஸ்ரீராம் கூறியிருந்தார்.

இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையறிந்த உணவு, சுகாதாரம் மற்றும் சித்தாத் துறை அதிகாரிகள், மூலிகை மைசூர்பா தயாரித்த கடையின் உரிமையாளர் ஸ்ரீராமிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசின் உரிய அனுமதி இல்லாமல் இது போன்ற உணவு தயாரிப்பு செய்ததை தவறு என்று கூறிய அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் அந்த கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ மூலிகை மைசூர்பாவை பறிமுதல் செய்து கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.

Tags : shop ,Corona ,Goa ,Herbal Mysorba , Coimbatore, Herbal, Mysoreba, Corona, Advertising, Sweet Shop, License, Cancellation
× RELATED யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு...